உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புனாணை வனவிலங்கு காரியாலயத்தில் திருட்டு!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்றும் ரில்லர் இயந்திரம் உட்பட பல பொருட்கள் திருட்டு போயுள்ள சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை கொழும்பு வீதியில் உள்ள புனாணையில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தில் கடமையாற்றி வருபவர்கள் வழமைபோல வெள்ளிக்கிழமை (02) மாலையில் கடமை முடிந்ததும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று அடுத்த நாள் சனிக்கிழமை (03) காலையில் காரியாலயத்துக்கு வந்தபோது அங்கு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

குறித்த காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு காரியாலயத்துக்குள் உள் நுழைந்து அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள், துளை கருவியான ரில்லர் ஒன்று, எரிவாயு அவண் இயந்திரம் ஆகிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0