உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸில் தீயிட்டு எரிப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
45 பார்வைகள்

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் தீயிட்டு எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி மீனவர்கள் 6 பேருடன் வென்னப்புவ கடலில் இருந்து பயணித்த இஷானி 1 என்ற மீன்பிடி படகு கடந்த 30 ஆம் திகதி சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது

சர்வதேச கடல்எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கை மீனவப்படகொன்று இலங்கை மீனவர்கள் 6 பேருடன் வெற்றிகரமாக கைற்றப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவு தெரிவித்திருந்தது.இதனையடுத்து குறித்த மீனவப்படகினை தீயிட்டு எரிப்பதற்கு சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது

நாட்டின் இறைமை மற்றும் கடல்சார்சுற்றுச்கூழலை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவு அறிக்கையின் ஊடாக தெரிவித்திருந்ததுஇதேவேளை இந்த விடயம் தொடர்பாக குறித்த மீனவப்படகின் உரிமையாளர் மற்றும் மீனவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

60 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

76 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0