உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகள் குறித்து வெளியான தகவல்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
96 பார்வைகள்

உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் உள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, 2023 பெப்ரவரி 14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகளை அமுல்படுத்துவதை, எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

உணவு லேபளிடல் மற்றும் விளம்பரப்படுத்தல் விதிமுறைகள், திரவ உணவுகளில் சீனி அளவிற்கான நிறக்குறியீட்டு விதிமுறைகள், உணவிற்கான உப்பு அயடின்கலத்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை அமுல்படுத்தல் ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

60 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

76 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0