உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஹர சிறைச்சாலையின் முன்னாள் களஞ்சியக் காப்பாளர் உட்பட இருவர் தடுத்து வைத்து விசாரணை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
43 பார்வைகள்

சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மஹர சிறைச்சாலையின் முன்னாள் களஞ்சியக் காப்பாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பியகம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க, சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.பியகம காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி அஜித் விஜேசிங்கவின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரிடமே தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி,முன்னாள் களஞ்சியக் காப்பாளரிடமிருந்து 2 கிராம் 250 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.மற்றயவரிடமிருந்து 51 கிராம் 130 மில்லி கிராம் ‘ஐஸ்’ மற்றும் 51 கிராம் 650 மில்லி கிராம் ‘ஹெரோயின்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்துகொண்டு இந்த போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் நபர் குறித்தும், இவர்களுக்கிடையிலான தொடர்பு குறித்தும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.பியகம காவல்துறை நிலையத்தின் உப காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் சார்ஜன்ட்கள் அடங்கிய குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

60 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

76 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0