உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொட்டும் மழையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் ஆர்ப்பாட்டம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே ‘அரசே நிர்வாக சீரழிவிலிருந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை மீட்டுத்தா’ வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் நிர்வாக சீர் கேட்டினால் நோயாளர்கள் நோய்க்கான சிகிச்சையை பெறமுடியாத தையடுத்து வைத்திய பணிப்பாளரை உடன் இடமாற்றக் கோரி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.இதையடுத்து வைத்தியசாலைக்கு முன்னாள் நேற்று(3) மாலையில் கொட்டும் மழையில் மக்கள் ஒன்று திரண்டனர்.

இதன்போது வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அடிதடி கலாச்சாரத்தை உடன் நிறுத்து வைத்திய பணிப்பாளரை உடன் வெளியேற்று, நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வைத்தியரை அதிகாரத்தில்; இருந்து உடனடியாக நீக்கு, வைத்திய அதிகாரியின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு வைத்திய பணிப்பாளர் வெளியேற வேண்டும், ஜனாதிபதி உடனடி வைத்தியரை விசாரணை செய்ய வேண்டும், என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பொலிஸ் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் கொட்டும் மழையில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதேவேளை ஜனாதிபதிக்கு இந்த வைத்தியசாலையில் இடம்பெற்ற சீர்கேடுகள் தொடர்பான மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

60 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

76 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0