உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பாடசாலை சூழலில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

பாடசாலைகள் மீள ஆரம்பித்தலை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆராயப்பட்டன.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனைக்குட்படுத்தபட்டது.

இச் செயற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களும் பங்கேற்றனர்.

இதில் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்கள் கண்டறியப்பட்டதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவோம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0