உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொஹுவளை துப்பாக்கிச் சூடு; சிக்கிய சந்தேக நபர்கள்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
84 பார்வைகள்

கடந்த 30ஆம் திகதி கொஹுவளை – போதியாவத்த பகுதியில் 16 வயது சிறுமியை சுட்டுக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 25, 28, 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர், துப்பாக்கியை வைத்திருந்த நபர், துப்பாக்கியை கொண்டு சென்ற நபர் மற்றும் சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கிய மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று சனிக்கிழமை (03) தெஹிவளை – களுபோவில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 03 ரிவால்வர் ரக துப்பாக்கிகள், 09 மில்லிமீற்றர் தோட்டாக்கள் பத்து, 50 கிராம் ஹெரோயின், 55 கிராம் ஐஸ் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக நடந்ததாக ஆரம்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொஹுவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

35 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0