உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரணிலுடன் இணைய தயாரில்லை சஜித்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
75 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விரும்பமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைந்து பயணிப்பதற்கு அண்மைக்காலமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சஜித் தலைவர், ரணில் தலைமை ஆலோசகர் என்ற அடிப்படையில் இந்த இணைவு சாத்தியப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே, இந்த இணைப்புக்குச் சாத்தியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“ஒன்றிணைந்து செயற்படும் திட்டங்களில் சஜித்துக்கு உடன்பாடு இல்லை. அவரிடம் அத்தகைய தலைமைத்துவம் இல்லை. சஜித் எப்போதும் தனித்துச் செயற்படுவதையே விரும்புபவர்.” – என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழேயே அஜித் மானப்பெரும வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0