உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்வி சீர்திருத்தமா? கலாசார சீரழிவா? – அரசாங்கத்தைக் கடுமையாக சாடிய சஜித்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் முறைசாரா நடவடிக்கையை ஊக்குவித்து, இந்நாட்டின் இலவசக் கல்வியை சீரழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (03) கரம்பேத்தர ஸ்ரீ அபயராஜராமய விகாரையில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

C.W.W.கன்னங்கராவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை, நவீன உலகிற்கு ஏற்ப மாற்றமடைய வேண்டும் என்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப புரட்சிகள் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில், நாமும் அதற்கேற்ப மாறாவிட்டால் பல தசாப்தங்கள் பின்னோக்கி தள்ளப்படுவோம் என அவர் எச்சரித்தார்.

கல்வியில் நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட வேண்டும்.அதேவேளை, எமது நாட்டின் கலாசாரம், பண்பாடு மற்றும் விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, வரலாறு ஒரு கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.நவீனமயமாக்கல் என்ற பெயரில் கல்வி முறைக்குள் முறைசாரா விடயங்களைப் புகுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.இது நாட்டின் கலாசாரத்திற்கு முரணானது எனவும், எதிர்கால சந்ததியினரை முழுமையாக அழிக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்விக்காக கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்ட போதிலும், இன்று அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து சில பக்கங்களை கிழித்துவிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.தாம் முன்னெடுக்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டங்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர், இவை வெறும் விநியோகம் அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கான சமூக முதலீடு என தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0