உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றும் நாளையும் வானில் தென்படும் விண்கல் !

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
87 பார்வைகள்

2026 ஆம் ஆண்டில் தென்படவுள்ள பிரதான விண்கல் ஒன்று இன்றும் நாளையும் இரவில் தென்படவுள்ளதுஇன்றைய பௌர்ணமி தினத்தில் சந்திரன் ஏனைய நாட்களை விட 30 வீதம் பிரகாசமாகவும் இது தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் தென்படவுள்ள பிரதான விண்கல் ஒன்று இன்றும் நாளையும் இரவில் தென்படவுள்ளது.இதற்கமைய நாளை அதிகாலை 4.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வடகிழக்கு திசை வானத்தில் இந்த விண்கல் தென்படவுள்ளது.

மணிக்கு சுமார் 80 விண்கற்கள் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இன்றும் நாளையும் இரவு வேளையில் வானில் பிரதான விண்கல் மழைகளில் ஒன்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது

அதிகாலை 4, 5, 6 மணிவரையான காலப்பகுதி போன்ற வேளைகளில், குறிப்பாக 4 இற்கும் 5 இற்கும் இடையில் வடகிழக்குத் திசையில் இவை தென்படும். மணிக்கு சுமார் 80 விண்கற்களை நாம் எதிர்பார்க்கிறோம். இது வால்வெள்ளியிலிருந்து உருவானதல்ல, சிறுகோள்களிலிருந்து வந்த பகுதிகளாகவே கருதப்படுகிறது.இன்றைய தினம் இன்னொரு சிறப்பும் உள்ளது. உண்மையில் இந்த வருடத்தில் 13 பௌர்ணமி தினங்கள் உள்ளன.

மே மாதத்தில் இரண்டு உள்ளன. இந்த ஜனவரி மாதத்தில் ஒரு பௌர்ணமி உள்ளது. அந்த பௌர்ணமி தினத்தில்சந்திரன் ஏனைய நாட்களை விட அதிக பிரகாசமாகத் தெரியும். அதனால்தான் பலர் இதனை ‘சுப்பர் மூன்’ என்கிறார்கள். பொதுவாகத் தெரிவதை விட 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமாகவும் இது தெரியும்.” இலங்கை நேரப்படி 3.32 மணியளவில் இது நிகழும். எனவே அந்த மிக நெருங்கிய சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால், அப்போது சந்திரன் சற்று பெரிதாகத் தெரியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

31 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

66 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

55 0 0