உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

புதிய தலைமை அதிகாரியை நியமித்த உக்ரைன் ஜனாதிபதி!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

நாட்டின் இராணுவப் புலனாய்வு அமைப்பின் தலைவரான கிரிலோ புடானோவை (Kyrylo Budanov) தனது புதிய தலைமை அதிகாரியாக (Chief of Staff) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நியமித்துள்ளார்.ஊழல் வழக்கில் சிக்கி அவரது முந்தைய ஆலோசகர் ஆண்ட்ரி யெர்மாக் (Andriy Yermak) பதவி விலகி, ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.தற்போதைய சூழலில் உக்ரைனுக்குப் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுவதால், இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த 39 வயதான புடானோவ் சரியான தேர்வாக இருப்பார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பல்வேறு துணிச்சலான தாக்குதல்களை முன்னின்று நடத்திய புடானோவ், தற்போது உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் தூதரகப் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்க உள்ளார்.

முன்னாள் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மாக், யுக்ரைன் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருந்த போதிலும், எரிசக்தித் துறையில் நடந்த சுமார் 100 மில்லியன் டொலர் ஊழல் முறைகேடு தொடர்பான விசாரணையில் அவரது இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

இந்த ஊழல் விவகாரம், சர்வதேச அளவில் உக்ரைனின் பிம்பத்தைப் பாதித்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் நிலையை இது பலவீனப்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த இக்கட்டான சூழலில், ராணுவ மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மிகுந்த அனுபவம் கொண்ட புடானோவின் நியமனம், உக்ரைனின் பாதுகாப்பு வியூகங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0