உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, வீடொன்றுக்கு அருகில் குறித்த சிறுவன் விழுந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து அந்தச் சிறுவனை நூரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0