உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கனடாவில் குடியேற விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இந்த ஆண்டில் கனடாவில் குடியேறுவதற்கு விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2026 ஆம் ஆண்டில் கனடா குடியேற்ற விதிகளை கடுமையாக கட்டுப்படுத்தி, புதிய குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை அதிகரித்து வந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு குறைவு, வீட்டுவசதி செலவுகள் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தங்களை குறைக்கும் நோக்கில் இவ்வாறு குடியேற்றத்தை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2024ம் ஆண்டில் 483000த்திற்கும் மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு கனடாவில் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்க 380000 மாக குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள், கனடாவில் முன்னர் அனுபவம் பெற்றவர்கள் ஆகியோருக்கு கனடாவில் குடியேறுவதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மருத்துவம், சமூக சேவைகள், வர்த்தக வேலைகள், விவசாயம், கல்வி , விஞ்ஞானம், தொதில்நுட்பம், கணிதம் போன்ற துறைகளில் அனுபவம் உடையவருக்கு குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

தற்காலிக தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் 367750 ஆக காணப்பட்ட புதிய தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கை இந்த ஆண்டு 230000ஆக குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் வெகுவாக குறைக்கப்படுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் கடுமையான தெரிவின் அடிப்படையில் குறிப்பாக திறமையானவர்களுக்கு கனடாவில் குடியேறுவதற்கும் கற்பதற்கும் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே கனடாவில் குடியேற விரும்புவோர் பிரெஞ்சு மொழி அறிவு, கல்வித் தகமை போன்றவற்றை அதிகரித்துக் கொள்வது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0