உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஊடகவியலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாடு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

பாகிஸ்தானில் சில ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊகட செயற்பாட்டாளர்கள் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்களை ஊக்குவித்ததாக ஊடகவியலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் சில ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊகட செயற்பாட்டாளர்கள் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்களை ஊக்குவித்ததாக ஊடகவியலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டில் வசித்து வருவதால், நீதிமன்றத்தில் ஒருவர் கூட முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி தஹீர் அபாஸ் சிப்ரா இந்த தீர்ப்பை நீதிமன்றில் அறிவித்துள்ளார்.2023 மே மாதம், இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் சில இராணுவ கட்டிடங்கள் மற்றும் அரசு சொத்துகளை தாக்கினர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னணி காரணமாக, பாகிஸ்தானிய அரசு மற்றும் இராணுவம், தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் விசாரணைகள் மூலம் நூற்று கணக்கானவர்களை குற்றம்சாட்டி விசாரணை செய்தது.இந்த விசாரணைகள், விமர்சன செய்திகளை தடுக்கும் நடவடிக்கை என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான சீ.பி.ஜே குற்றம்சாட்டியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏழு நாட்களுக்குள் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம் என்பதுடன் பாகிஸ்தானுக்கு திரும்பினால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0