உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பெண் உறுப்பினர்களுக்கு கூடுதல் கழிப்பறை வசதிகளை கோரிய மனுவுக்கு ஆதரவளித்த ஜப்பானிய பிரதமர்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
17 பார்வைகள்

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தகாயிச்சி (Sanae Takaichi), அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களுக்காகக் கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தக் கோரி சுமார் 60 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து மனு அளித்துள்ளார்.2024 ஒக்டோபரில் நடந்த தேர்தலில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இதுவரை இல்லாத அளவில் சாதனை அளவாக 73 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இருப்பினும், நாடாளுமன்றக் கட்டடத்தில் பெண் உறுப்பினர்களுக்கான வசதிகள் இன்னும் பழைய நிலையிலேயே இருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள வசதிகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் யசுக்கோ கோமியாமா கூறுகையில், “முக்கியக் கூட்டத் தொடர்கள் தொடங்குவதற்கு முன்னால் பெண் கழிப்பறைகளின் முன் நீண்ட வரிசையில் உறுப்பினர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் பல பெண் உறுப்பினர்கள் கழிப்பறைக்குச் செல்வதையே தவிர்த்து விடுகின்றனர்,” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பிரதான சபை அருகே பெண் உறுப்பினர்களுக்காக இரண்டு அறைகள் கொண்ட ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது.ஒட்டுமொத்தக் கட்டடத்திலும் பெண்களுக்கு 22 கழிப்பறைகளே உள்ள நிலையில், ஆண்களுக்கு 67 கழிப்பறை வசதிகள் உள்ளன. 1936 ஆம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டபோது பெண்களுக்கு வாக்குரிமையே வழங்கப்படவில்லை.

1945 லேயே பெண்களுக்கு அங்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அரசாங்கம் உண்மையிலேயே பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்த நினைத்தால், இந்த அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க ஒத்துழைக்க வேண்டும்” என்று பெண் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்ற போது, அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாகக் கூறிய சானே தகாயிச்சி, தற்போது இந்தப் போராட்டத்திலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0