உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கூடிய ‘சுற்றுச்சூழல் சபை’!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றுச்சூழல் சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (02) கூடியது.இச்சபை பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் ஒன்றுகூடியுள்ளதுடன் 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்த ஆண்டு கூடியுள்ளது.

கடல் சூழலில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, கடல் மாசுபாட்டைத் தடுப்பது குறித்த பொருத்தமான ஆலோசனைகள், உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியில் நடைபெறும் செயல்பாடுகளின் நிலை மற்றும் அந்த செயல்பாடுகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து இந்த சபையின் ஊடாக ஆலோசனை வழங்கப்படுகின்றது.

இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியை மாசுபாட்டின்றி பராமரிப்பது மற்றும் அதன் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்குவதன் மூலம் இலங்கையின் கடல்சார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்த சபை மீண்டும் செயல்படுத்துவது, நாட்டின் நீலப் பொருளாதாரத்தை (Blue Economy வலுப்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதல் சுற்றுச்சூழல் சபையில் விருந்தினர்களாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி, பிரதி அமைச்சர் என்டன் ஜெயக்கொடி, அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, தலைவர் சமந்த குணசேகர, பொது முகாமையாளர் ஜகத் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0