உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
59 பார்வைகள்

ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள், வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இட்டு அழிக்கும் நடவடிக்கை, இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, அவற்றை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக,கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு, பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் ஆகிய போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து போதைப்பொருள் தொகை பொறுப்பேற்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வனாத்தவில்லுவ பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட ஹெரோயின் மற்றும் அபின் போதைப்பொருட்கள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில்,பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எம்.சி. ஹேரத்தின் வழிகாட்டலில் உலையில் இட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

34 0 0