உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன.

மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news குறிப்பிட்டுள்ளது.வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவது வெளிப்படுத்தப்பட்டது.

பல போராட்டக்காரர்கள் நாட்டின் உச்ச தலைவரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளனர். சிலர் முடியாட்சிக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அமைதியின்மையைத் தணிக்கும் முயற்சியாக அதிகாரிகள் வங்கி விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை (டிசம்பர் 31) நாடு முழுவதும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மூடப்பட்டன.

திறந்த சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் இந்த போராட்டம் தெஹ்ரானில் வெடித்தது.2022 ஆம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம் பெண் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சிக்குப் பின்னர் இந்த போராட்டங்கள் மிகவும் பரவலாக உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0