உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
72 பார்வைகள்

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நேற்று (1) இரவு 10 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாடகைக்காக பெறப்பட்டிருந்த வீடொன்றில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பொரளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் ஒருவரின் உடலில் 4 துப்பாக்கி ரவைகளும், மற்றுமொருவரின் உடலில் ஒரு ரவையும் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், இது இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையிலான முன்விரோதமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

2 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0