உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புத்தாண்டில் அதிர்ச்சி தந்த தேங்காய் விலை; அரசின் அதிரடி முடிவு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வெளிச்சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் 122 – 124 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், வெளிச்சந்தையில் அதே தேங்காய் 180 – 200 ரூபாய் வரையிலான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுனிமல் ஜயகொடி கவலை வெளியிட்டுள்ளார்.

ஏலத்தில் குறைந்த விலைக்கு தேங்காய்களை வாங்கி, நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த ஆண்டு முதல், மாவட்ட ரீதியாக நேரடியாக தேங்காய்களை விற்பனை செய்ய சபை திட்டமிட்டுள்ளது.இதன்படி, சபையினால் நிர்வகிக்கப்படும் 11 தென்னந்தோட்டங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்கள் எவ்வித இடைத்தரகர்களுமின்றி நேரடியாக நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளன.

முன்னர் கொழும்பு, களுத்துறை, பத்தரமுல்ல மற்றும் மஹரகம போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் விற்பனைச் சேவை போன்று, இம்முறையும் சகல மாவட்டங்களிலும் நியாயமான விலையில் தேங்காய்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு நாட்டில் 2,900 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3,000 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், பூச்சிகள் மற்றும் ஏனைய விலங்குகளினால் ஏற்படும் சுமார் 10 சதவீத அறுவடை இழப்பைத் தடுப்பதற்கான விசேட பாதுகாப்புத் திட்டங்களும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுனிமல் ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0