போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா கைது.!
வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் சகா பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கண்டி, கந்தர, தெவிநுவர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 115 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 23 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.