உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஆணையை மீறினால் மக்கள் பாடம் புகட்டுவர்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“இந்த நாட்டு மக்கள் சக்திக்கு முன்னால் வேறு எந்தச் சக்தியும் தாக்குப் பிடித்து நிற்க முடியாது. எனவே, மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்பட்டால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”

இவ்வாறு அமைச்சர் கே.டி. லால்காந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பானது தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலையடைந்துள்ளது.

எனவே, எமது பயணத்தைக் குழப்புவதற்கு அந்தத் தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்தச் சதி நடவடிக்கைக்கு சில தீய எண்ணம் கொண்ட ஊடகங்களும் துணை நிற்கின்றன.

மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட்ட அரசுகளுக்கு இந்த நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டினர். அதேபோல் மக்களைக் குழப்பும் வகையில் செயற்படும் ஊடகங்களுக்கும் மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள்.

மக்கள் சக்திக்கு முன்னால் வேறு சக்திகள் தாக்குப் பிடித்து நிற்க முடியாது.

ஊழல், மோசடி அற்ற பயணம் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு எதிராகச் சிலர் செயற்படுகின்றனர். அரசு கவிழும் என்றெல்லாம் கதைகளைப் பரப்பி வருகின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0