• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் ஜே.வி.பியினர் முறையற்ற தலையீடு.!

Mathavi by Mathavi
December 15, 2025
in இலங்கை செய்திகள்
0
பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் ஜே.வி.பியினர் முறையற்ற தலையீடு.!
Share on FacebookShare on Twitter

பேரிடர் நிவாரண விநியோக நடவடிக்கைகளில் அரசாங்க அரசியல்வாதிகள் தலையிடுகின்றனர் எனவும், தங்கள் ஆதரவாளர்களின் நலனுக்காக அரச நிவாரண நிதியைத் திருப்பி விடுகின்றனர் எனவும் முறைப்பாடுகள் ஏராளமாக எழுந்துள்ளன என்று கொழும்பின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தனது நேற்றைய (ஞாயிறு) வார வெளியீட்டின் ஆசிரிய தலையங்கத்தில் பட்டவர்த்தனமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

‘பேரிடர் நிவாரணமும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளும்’ என்ற தலைப்பில் அந்த ஆசிரிய தலையங்கம் வெளியாகியுள்ளது.

”பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய இழப்பீட்டுத் தொகுப்பை அறிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான பணத்தை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கி உள்ளது. மக்களுக்குச் சொந்தமான நிதியையே அரசு செலவிடுகிறது. அந்த நிதி ஜே.வி.பியினுடையது அல்லது தேசிய மக்கள் சக்தியுனுடையது அல்ல. எனவே, அரச நிதியை பொறுப்புடன் வழங்குவது மட்டுமல்லாமல், அவ்வாறு செய்வதாகவும் காட்டப்படவும் வேண்டும். வெளிப்படைத்தன்மை என்பது அனைத்து வகையான நிதி முறைகேடுகளுக்கும் மிகவும் சக்திவாய்ந்த மருந்தாகும். அரசாங்க அரசியல்வாதிகள் நிவாரண விநியோக நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர் எனவும், தங்கள் ஆதரவாளர்களின் நலனுக்காக நிதியை திருப்பி விடுகின்றனர் எனவும் முறைப்பாடுகள் ஏராளமாக உள்ளன.” – என்று அந்த நாளிதழ் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி. – என்.பி.பி அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அனைத்து மட்டங்களிலும் நடைபெற்று வரும் பேரிடர் நிவாரணத் திட்டங்களில் தலையிடுகின்றனர் எனவும், கிராம சேவையாளர்களைக் கூடத் தடுக்கின்றனர் எனவும் இலங்கை ஐக்கிய கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றமையையும் அந்த நாளிதழ் மேற்கோள் காட்டியிருக்கின்றது.

அரசியல் அதிகாரத் தரப்பினர் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்பி, அரசு நடத்தும் நலன்புரி மையங்களுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளனர் என்று அவர் கூறியமையும் அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு பிரஜாசக்தி குழுக்களின் அரசாங்க உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல் பெறுமாறு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்த விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே சமயம் கடந்த வியாழக்கிழமை, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமித் கொடிகார இதே போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

தேசிய மக்கள் முன்னணி அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் தலா ரூ.25,000 இழப்பீடு பெற தன்னிச்சையாக உதவுகின்றனர் என அவர் கூறினார். பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், நிவாரணத் திட்டங்கள் ஒருபோதும் அந்த வகையில் அரசியலாக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை கட்டாயப்படுத்த வேண்டிய அளவுக்கு அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன என்று அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

‘பேரிடர் நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியை தவறாகப் பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும். சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆட்சியில் இருக்கும்போது எரிபொருள் உதவித்தொகையை மோசடியாகப் பெற்றமைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றம் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது.’ – என்றும் அந்த ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Related Posts

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!

by Mathavi
July 10, 2026
0

தற்போது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களுடன் யாழ்ப்பாணத்தின்...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகரசபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால்...

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்து வீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் இந்த...

வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!

வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!

by Mathavi
July 10, 2026
0

தொண்டமானாறு - அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுகளால் தாம் பெரும் அசௌகரியங்களை...

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

by Mathavi
July 10, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை முன்னிட்டு, பாதயாத்திரையில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை வழியூடான காட்டுப் பாதை இன்று...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை - 5...

கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்; பொலிஸார் தீவிர விசாரணை.!

கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
July 10, 2026
0

கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09)...

வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு.!

வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு.!

by Mathavi
July 10, 2026
0

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிட புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள்...

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
July 10, 2026
0

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி