உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த சிற்றூர்தி(வேன்) ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மார்க்கண்டு ஜெயநாதன் எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தையில் உணவு தயாரித்து கொடுத்து விட்டு வீடு திரும்பிய வேளை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி(வேன்) ஒன்று, ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது, எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகம் காரணமாக இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி வீதியில் கவிழ்ந்துள்ளன.

இவ்விபத்தின் போது இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சிற்றூர்தி(வேன்) ஓட்டுநரும் முச்சக்கர வண்டி ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.

விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் கூடிய பிரதேச மக்கள், காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிற்றூர்தி(வேன்) ஓட்டுநரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தமையினால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கல்முனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவ்வாறு கல்முனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே குறித்த சிற்றூர்தி(வேன்) ஓட்டுநர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொடர்ந்து பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விபத்துத் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0