கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொ**லை.!
அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான கயனி இரோமா திசாநாயக்க என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மகள் பாடசாலைக்கு செல்வதற்காக உணவு தயாரிப்பதற்காக இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டின் சமையலறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், வீட்டின் பின்புறம் மறைந்திருந்த சந்தேகநபர் மன்னா, பெண்ணின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியமையால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை செய்த நபர் விஷம் அருந்திவிட்டு உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது, மஹஇலுப்பள்ளம பலநோக்குக் கட்டிடத்திற்கு அருகில் அவரது உந்துருளி காட்டு யானையுடன் மோதியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மஹஇலுப்பள்ளம, கலாகரம்பேவ பிரதேசத்தில் தங்க நகைகளை அடகு பிடிக்கும் வர்த்தகர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள கால்வாயொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பணத் தகராறு அல்லது தகாத உறவு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


