மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.!
மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக்கொடை முகாம், நேற்று புதன்கிழமை குடத்தனை வடக்கு நினைவேந்தல் வளாகத்தில் நடைபெற்றது.
பருத்தித்துறை இரத்த வங்கியில் நிலவும் தொடர்ச்சியான குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், குடத்தனை வடக்கு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இரண்டாவது ஆண்டாக இந்தக் குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இம்முகாமில் பருத்தித்துறை இரத்த வங்கி வைத்தியர் சந்திரகாந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு குருதி சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தன்னார்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








