உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாள்; வல்வெட்டித்துறையில் இன்று கேக் வெட்டி பொங்கிய எழுச்சி.!

இலங்கை செய்திகள் 30 நிமிடங்கள் முன்
22 பார்வைகள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை, அவர் சிறுவயதில் வாழ்ந்த வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள அவரது பூர்வீகக் காணியில் பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனை முன்னிட்டு அந்தக் காணி மற்றும் ஆலடி வீதி ஆகிய பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இன்று முற்பகல் 10 மணிக்குக் கேக் வெட்டப்பட்டுப் பிறந்தநாள் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினத்தையொட்டி வடக்கு – கிழக்கு, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வல்வெட்டித்துறை ஆலடியில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் இரண்டு கேக்குகள் வெட்டப்பட்டு, வருகை தந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், 72ஆவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் 72 எள்ளுப்பாகு உள்ளிட்ட சிற்றுண்டிகளும், இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டன.

அதேசமயம், பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்குப் பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அந்தப் பகுதிப் பொதுமக்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, தலைவர் பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்துள்ள காணியின் மதிலில், “தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லம்” எனப் பொறிக்கப்பட்ட புதிய பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய பதாகை நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அச்சுறுத்தல்கள் நிலவிய காலகட்டங்களில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவ்விடத்தில் கேக் வெட்டிப் பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னெடுத்து வந்திருந்தமையும் இவ்வேளையில் நினைவுகூரப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆணொருவர் உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

ரத்கம – மலிடுவ பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர்…

26 0 0
இலங்கை செய்திகள்

முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்.!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது நேற்றையதினம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி.!

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சாய்ந்தமருது…

25 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கணவனைக் கொ**லை செய்த மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்துத்…

33 0 0