பச்சிலைப்பள்ளியில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு.!
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளிக் கோட்டத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் பளை நகர முற்றத்தில் இன்றையதினம் (26) பகல் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











