உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சொகுசு வாகன வழக்கு; ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
113 பார்வைகள்

சட்டவிரோதமாக சொகுசு வாகனத்தைத் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு 130,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (25) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சர்ச்சைக்குரிய குறித்த வாகனத்தை அரசுடமையாக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

முதலாவதாக 5,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக 100,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 06 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, இந்தக் குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையை 05 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

மூன்றாவதாக 25,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 03 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0