உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசுக்கு கிடையாது.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
104 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் மீது நம்பிக்கையில்லை எனவும், முன்வைக்கப்படும் சிறந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் அந்தக் குழு இதுவரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் செயற்குழுவின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது என்பதாலேயே செயற்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை எனச் செயற்குழுவின் தலைவரான அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினமும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் காலத்தை மேலும் நீட்டிக்கும் சாத்தியமே காணப்படுகின்றது.

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால், செயற்குழு அது குறித்து எவ்விதக் கவனமும் செலுத்தவில்லை.

மாகாண சபைத் தேர்தலில் நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, புதிய சிக்கல்களை உருவாக்கும் வகையிலேயே செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.

இந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது. ஆகவே, அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும். காலத்தை வீணடிக்கும் அரசின் செயற்பாட்டில் பங்காளியாக முடியாது என்பதற்காகவே இந்தக் குழு நடவடிக்கைகளில் நாங்கள் பங்கேற்கவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0