உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஒதுக்கப்படும் நிதியை உரிய முறையில் செலவிடும் இயலுமை அரசிடம் இல்லை.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
118 பார்வைகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நிதியை உரிய முறையில் செலவிடுவதற்கான இயலுமை அரசிடம் இல்லை என்றும், இதனால் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினை நிதி ஒதுக்கீடு செய்வதில் அல்ல. மாறாக, ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை உரிய முறையில் செலவிடுவதற்கான இயலுமை அரசிடம் இல்லாமையே பிரதான பிரச்சினையாகும்.

உலக வங்கியின் அறிக்கையின்படி, கடந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையில் 16.7 சதவீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

இதன்படி, வருட இறுதிக்குள் ஒதுக்கப்பட்ட நிதியில் 30 முதல் 40 சதவீதம் வரையான தொகையை மாத்திரமே அரசால் செலவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான குறைந்தளவிலான நிதிப் பயன்பாட்டின் மூலம் அரசு எதிர்பார்க்கும் அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைந்துகொள்ள முடியாது. அத்துடன், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய துறைகளுக்கான நிதிச் செலவினங்கள் அதிகரிக்கப்படுவதில்லை என்பதுடன், ஏற்கனவே நடைமுறையிலுள்ள செலவினங்களும் குறைவடையும் போக்கே காணப்படுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0