க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி, 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளில் பெயர், பாடம் அல்லது ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின், அவற்றை உரிய காலப்பகுதிக்குள் சரிசெய்துகொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய பரீட்சார்த்திகள், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அனுமதி அட்டைகளில் எவ்விதமான திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துப் பரீட்சார்த்திகளும் மற்றும் பாடசாலை அதிபர்களும் இது குறித்து உரிய கவனம் செலுத்தித் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


