உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விமல் வீரவங்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பு

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
82 பார்வைகள்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தலை பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் விடுத்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தது.

சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பாக ஏற்கனவே விமல் வீரவங்சவிற்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தினத்தன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக இவ்வாறு மீளவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

88 0 0
இலங்கை செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15…

88 0 0
இலங்கை செய்திகள்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…

88 0 0
இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின்…

59 0 0