உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபையின் கீழிருந்த வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்தமை வரவேற்கத்தக்கது.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
92 பார்வைகள்

வரவு – செலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசிவிட்டு, வெளியே வந்து வரவு – செலவுத் திட்டத்தை விமர்சிப்பது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி தீர்வு உட்படப் பல விடயங்களில் இவர்கள் இவ்வாறே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2027ஆம் ஆண்டிற்காக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமையினால் பாமர மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாட்டுச் சட்டத்திற்குத் தேரர்கள் உட்பட அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில வரவேற்கத்தக்க விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தமையானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி இவ்வாறு வரிகளை அதிகரித்தால், எதிர்காலத்தில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி உருவாகும்.

மேலும், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு பாமர மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்போதே அது சிறந்த வரவு – செலவுத் திட்டமாக அமையும்.

ஜனாதிபதி ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருந்தபோதிலும், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்குப் பாரிய நன்மைகள் எவையும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அரிசி இறக்குமதி செய்யப்பட்டமையால் உள்நாட்டு நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உர வகைகள் மற்றும் கிருமிநாசினிகளின் விலைகள் அதிகமாக உள்ள நிலையில், விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தூரநோக்குடன் இவ்விடயம் கையாளப்படவில்லை.

மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த நான்கு வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமையை நாம் முழுமையாக வரவேற்கிறோம். மாகாண சபைகள் அவசியமற்றவை என்பதே எமது கொள்கையாகும். மாகாண சபைகளின் நிர்வாகத்தினால் வைத்தியசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, அவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதனால் நிர்வாகச் செலவுகள் குறைவதுடன், சிறந்த கட்டுப்பாடும் ஏற்படும்.

வரவு – செலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசிவிட்டு, வெளியே வந்து வரவு – செலவுத் திட்டத்தை விமர்சிப்பது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி தீர்வு உட்படப் பல விடயங்களில் இவர்கள் இவ்வாறே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இலங்கையில் அண்மைக்காலமாகச் சில தேரர்கள் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாகும். நாட்டின் பொதுச் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் தேரராக இருந்தாலும் சரி, மௌலவியாக இருந்தாலும் சரி அனைவரும் கட்டுப்பட வேண்டும். தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்குப் பின்னால் நிச்சயமாக இனவாத சக்திகள் செயற்படுகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவர். தற்போது நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத சூழ்நிலையில், இனவாதத் தரப்புகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

எனவே, தற்போதைய ஆட்சி தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என உலமா கவுன்சில் தலைவர் முபாறக் முப்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

89 0 0
இலங்கை செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15…

88 0 0
இலங்கை செய்திகள்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…

88 0 0
இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின்…

59 0 0