உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விரைவில் உடைகின்றது ஜே.வி.பி.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
74 பார்வைகள்

மக்கள் விடுதலை முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்பட ஆரம்பித்துள்ளன என்றும், விரைவில் அந்தக் கட்சி பிளவுபடும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசின் மக்கள் செல்வாக்குக் குறுகிய காலத்திலேயே மிக வேகமாகக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக உருவாகி வரும் கடும் எதிர்ப்பலைகள் மற்றும் செல்வாக்குச் சரிவு தொடர்பான புலனாய்வுத் தகவல்களும் அரசுக்குத் தற்காப்பு ரீதியாகக் கிடைத்துள்ளன.

இதன் காரணத்தினாலேயே, நாட்டில் மக்களின் குரலை ஒடுக்குவதற்காகப் பல்வேறு கடுமையான அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவருவதற்கு அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது.

அதேபோன்று, ஜே.வி.பி. கட்சிக்குள்ளும் தற்போது பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. விரைவில் அந்தக் கட்சி உடையும் நிலைக்குத் தள்ளப்படும். ஏனெனில், மனசாட்சியுள்ள மனிதர்களும் மக்களுக்காகச் சிந்திப்பவர்களும் இன்னமும் அந்தக் கட்சிக்குள் இருக்கவே செய்கின்றனர்.

நான் இங்கு தேசிய மக்கள் சக்தியைக் குறிப்பிடவில்லை. ஜே.வி.பி. என்ற முதன்மைக் கட்சியையே குறிப்பிடுகின்றேன். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி எனும் கூட்டமைப்பு ஏற்கனவே பிளவுபட ஆரம்பித்துவிட்டது என்பதுதான் உண்மை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

55 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

76 0 0
இலங்கை செய்திகள்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச்…

76 0 0
இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில்…

75 0 0