உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
80 பார்வைகள்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், SEDR செயற்திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு அக்/ அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் வை.ராசித் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எல். நசிபா பங்குபற்றுதலுடன் கடந்த 2026.11.04 முதல் 2026.11.06 வரை மூன்று நாட்களாக இச்செயலமர்வு நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. அ. பாத்திமா சினோஸ் இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் வளவாளர்களாக நாவிதன்வெளி பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். அன்பாஸ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி வி.லாவன்யா மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மினா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி நெறிகளை வழங்கினர்.

அத்துடன், கல்முனை உப பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.அருள்பிரசாந்தன், கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எப்.எஸ்.எஸ்.ஹசன், அக்கரைப்பற்று பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம். சங்கீதன், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப் உள்ளிட்ட பலரும் பாடசாலை மத்தியஸ்த அலகிற்குப் பொறுப்பான பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களும் இந்நிகழ்வில் உற்சாகமாகப் பங்குபற்றினர்.

இப் பயிற்சி செயலமர்வின் மூலம் மாணவர்களுக்கு முரண்பாடுகளைத் தவிர்த்தல், முறையான தொடர்பாடல் மற்றும் கலந்துரையாடல் திறன்கள் மூலம் மத்தியஸ்த செயல்முறைகளைக் கையாளும் முறைகள் பிரயோக ரீதியான அறிவுடன் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வின் நிறைவாக இப்பாடசாலையில் புதிய ‘பாடசாலை மத்தியஸ்த அலகு’ (School Mediation Unit) உத்தியோகப்பூர்வமாக நிறுவப்பட்டதுடன், பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

55 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

76 0 0
இலங்கை செய்திகள்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச்…

76 0 0
இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில்…

74 0 0