அனுராதபுரம் புனித நகர மேம்பாட்டுத் திட்டத்துக்கு எதிராக 3 ஆவது நாளாக தொடரும் சத்தியாக்கிரகம்.!
அனுராதபுரம் புனித நகர மேம்பாட்டுத் திட்டத்துக்கு எதிராக, அனுராதபுரம் ருவன்வெலி மகா சேயவுக்கு அருகில் பௌத்த பிக்குகள் குழுவினர் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை ஏற்க மறுத்து பிக்குகள் தொடர்ந்தும் அங்கு தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளிடம் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாலங்கொட கஸ்ஸப தேரர்,
அனுராதபுரம் புனித நகர மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக மீளப் பெறப்படும் வரை தமது போராட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ருவன்வெலி மகா சேயவுக்கு மிக அருகில் அமைந்துள்ள ‘தன்சல்’ (தானசாலை) வளாகத்திலேயே இந்தப் பௌத்த பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


