உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாசிப்பு வியாழக்கிழமை.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
92 பார்வைகள்

மன்னார் நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாசிப்பு மற்றும் இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற உள்ளதாக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முதலாவது வாசிப்பு கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்றது. இதன் இறுதி வாசிப்பு மற்றும் இறுதி வாக்களிப்பு எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

நகர சபையின் சொந்த வருமானமாக 24 கோடி 48 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறுகிறது. கொடைகளாக 8 கோடியே 36 இலட்சத்து 70 ஆயிரத்து 550 ரூபாய் கிடைக்கப்பெறுகிறது. மொத்த வருமானமாக 32 கோடியே 85 இலட்சத்து 34 ஆயிரத்து 980 ரூபாய் காணப்படுகின்றது.

நடைமுறைச் செலவீனங்களுக்காக 22 கோடியே 10 இலட்சத்து 64 ஆயிரத்து 700 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான நேரடி அபிவிருத்தி வேலைகளுக்கான ஒதுக்கீடாக மூலதனச் செலவீனம் 10 கோடியே 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதீட்டு மீதியாக ர 280 ரூபாய் உள்ளது.

2028 ஆம் ஆண்டுக்குள் மன்னார் நகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் வீதிகளும் வடிகால்களும் முழுமையாக அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டமிடலுடன் இவ் மதிப்பீடு உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடியே 74 இலட்சம் ரூபாவில், ஒற்றை வட்டாரத்திற்கு 74 இலட்சம் ரூபாவும், இரட்டை வட்டாரத்திற்கு 1 கோடியே 40 இலட்சம் ரூபாவும் நிதிப் பங்கீடு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற 8 கோடி ரூபாய் நிதி ஊடாக, குப்பைகளை மறுசுழற்சி முறையில் அகற்றுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான பெரிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்து குப்பைகளை முறையாக கையாள்வதற்கான திட்டமும் நகர சபையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் நலனையும், அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டே மன்னார் நகர சபை செயற்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

58 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

79 0 0
இலங்கை செய்திகள்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச்…

78 0 0
இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில்…

76 0 0