இலங்கையில் இப்போது இருப்பது மிகவும் பலவீனமான எதிர்க்கட்சி – அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவிப்பு!
எங்கள் அரசாங்கத்துக்கு சவால் எதுவும் இல்லை. ஏனென்றால் வலுவான எதிர்கட்சி ஒன்று இருந்தால்தான் அது இருக்கும் என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
எங்கள் அரசாங்கத்துக்கு சவால் எதுவும் இல்லை. ஏனென்றால் வலுவான எதிர்கட்சி ஒன்று இருந்தால்தான் அது இருக்கும்.
ஆனால் இலங்கையில் இப்போது இருப்பது மிகவும் பலவீனமான எதிர்க்கட்சிதான். அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை, எந்த பார்வையும் இல்லை.
அதனால், மதவாதம், இனவாதம் ஆகியவற்றை தூண்டிவிட்டு, நம் நாட்டை கீழே தள்ளிவிட முடியுமா என்று முயற்சி செய்யும் ஒரு கூட்டம் மட்டும்தான் இருக்கிறது.
ஆனால் நம் நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் அனைத்து மக்களும் சேர்ந்துதான் இந்த இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்திருக்கிறார்கள்.
அதனால் அவர்களுக்கு திரும்பவும் அதற்குள் இடம் கிடைக்காது. இப்போது அவர்கள் அந்த சின்ன சின்ன சில்லறை வேலைகளை செய்துவிட்டு மீதி காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் உண்மையாகவே எதிர்க்கட்சியால் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. ஏனென்றால் நம் நாட்டில் திரும்பவும் இனவாதம் உருவாக விடமாட்டோம். இலங்கை மக்களுக்கு அது நன்றாக தெரியும்.
அவர்களுக்கு அது புரியும். அதைச் செய்ய முடியாது என்றார்.


