உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தெனியாயவில் நீராடச் சென்று காணாமல்போன நால்வரில் இருவரின் சட@லங்கள் மீட்பு!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
88 பார்வைகள்

தெனியாய பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களில் இருவரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (7) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகளில் கடற்படையினரும் பொலிஸாரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள கெலேதொல எனும் இடத்திற்கு நீராடச் சென்ற நான்கு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களுள் 6 பேர் குறித்த பகுதியில் நீராடச் சென்றுள்ளனர். அவர்களிலேயே நால்வர் நீரில் மூழ்கிக் காணாமல்போயிருந்தனர்.

காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையினரும் பொலிஸாரும் நேற்று பிற்பகல் தொடங்கிய தேடுதல் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் போதே இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தெனியாயவில் நீராட சென்று மாயமான நால்வரின் சட@லங்களும் மீட்பு!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில்…

86 0 0
இலங்கை செய்திகள்

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து : 7 படகுகள் சேதம்

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும்…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…

80 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற தீபாவளி சிறப்பு பூஜைகள்

மலர்ந்துள்ள தீபத் திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பல ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று(08) காலை முதல் சிறப்பாக இடம்பெற்றது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்தில்…

84 0 0