உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற தீபாவளி சிறப்பு பூஜைகள்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
85 பார்வைகள்

மலர்ந்துள்ள தீபத் திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பல ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று(08) காலை முதல் சிறப்பாக இடம்பெற்றது.

அந்த வகையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் தீபாவளி சிறப்பு பூஜைகள் இடம் பெற்றதோடு, பாரம்பரிய சமய அனுஷ்டானங்கள் மேற்கொண்டு தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலையில் எழுந்த மக்கள் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடைகள் அணிந்து தமது குடும்பத்தினருடன் அருகே உள்ள இந்து ஆலயங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகள் இன்று(08) காலை முதல் சிறப்பாக இடம்பெற்றது. ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட பூஜை இடம்பெற்றது.

இதன் போது பெருமளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தெனியாயவில் நீராட சென்று மாயமான நால்வரின் சட@லங்களும் மீட்பு!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில்…

86 0 0
இலங்கை செய்திகள்

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து : 7 படகுகள் சேதம்

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும்…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…

80 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி வழிபாடு – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இன்று (08.11.2026) விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டதுடன்,…

82 0 0