உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டமூலங்களை நிறைவேற்றினாலும் நடைமுறைப்படுத்த விடவே மாட்டோம்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
86 பார்வைகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், அவற்றை நாட்டில் நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கூட்டாகச் சூளுரைத்துள்ளன.

இந்த அடக்குமுறைச் சட்டமூலங்களுக்கு எதிராகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சங்கக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க முக்கியஸ்தரான சமன் ரத்னப்பிரிய,

“மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். கடுமையான எதிர்ப்புகளையும் மீறி இந்தச் சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எந்த வகையிலும் இடமளிக்கப்போவதில்லை.

தொழிற்சங்கங்களை முடக்குவதற்கோ அல்லது தொழிற்சங்க உறுப்பினர்களைக் கைது செய்வதற்கோ அரசு முயற்சித்தால், நாடு தழுவிய ரீதியில் கடுமையான போராட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம். இது ஆரம்பம் மட்டுமே. மக்கள் சக்தியைத் திரட்டி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுப்போம்.” – என்று எச்சரித்தார்.

அத்துடன், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாகக் கோஷங்களை எழுப்பினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை…

81 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில்…

70 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

75 0 0
இலங்கை செய்திகள்

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்துகள்; சிக்கிய சாரதிகள், நடத்துநர்கள்.!

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (07) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதேவேளை, ஹட்டன் நோக்கி…

82 0 0