வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து.!
அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத் தீ விபத்து காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இச்சம்பவம் தொடர்பாகக் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


