உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
88 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவை  மீன்பிடி படகு ஒன்றுடன்  07 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி  நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே   மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய  மீனவர்கள் 07 பேர் படகு ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (1) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 , தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை வடமத்திய கடற்படை கட்டளையகம் கண்காணித்தது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு, இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குதுறை க்கு அழைத்து வரப்பட்டது டன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கடும் காய்ச்சலுடன் மீன்பிடிக்கச் சென்ற மகனை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!!

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து…

42 0 0
இலங்கை செய்திகள்

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!

பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே…

64 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி இன்று இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  பணிக்குழுவினர், பிரதேச…

76 0 0
இலங்கை செய்திகள்

குளத்தில் விழுந்த சிறுமி உயி@ரிழப்பு

புத்தளம் மாவட்டம் உடப்பு , கொத்தந்தீவு பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக இருந்த சிறிய குளத்தில் விழுந்து நேற்று (31) ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

78 0 0