உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

என்.பி.பியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க காலமானார்!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
84 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தனது 85 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை காலமானார்.

கண்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

லால் விஜேநாயக்க, நாட்டின் அரசியல், மனித உரிமைகள் மற்றும் சமூக இயக்கங்களில் பல தசாப்த காலமாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஒரு முன்னணி அரசியல் செயற்பாட்டாளரும் சட்ட வல்லுநருமாவார்.

இடதுசாரி அரசியல் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அவர், அரசமைப்பு சீர்திருத்தங்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை வகுப்பிலும் மற்றும் அதன் நிறைவேற்றுக்குழுவின் முக்கிய தீர்மானங்களை எடுப்பதிலும் அவர் தனது இறுதிக்காலம் வரை தீவிரமாகப் பங்காற்றியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கடும் காய்ச்சலுடன் மீன்பிடிக்கச் சென்ற மகனை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!!

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து…

57 0 0
இலங்கை செய்திகள்

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!

பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே…

65 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி இன்று இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  பணிக்குழுவினர், பிரதேச…

77 0 0
இலங்கை செய்திகள்

குளத்தில் விழுந்த சிறுமி உயி@ரிழப்பு

புத்தளம் மாவட்டம் உடப்பு , கொத்தந்தீவு பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக இருந்த சிறிய குளத்தில் விழுந்து நேற்று (31) ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

79 0 0