உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
82 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், இனிவரும் காலங்களிலும் தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ ஜனநாயகத்துக்கு விரோதமானதாக அமையாது என்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்படப்போவதில்லை. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் இயற்றப் போவதும் இல்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது.” – என்றார்.

கடந்தகால அரசுகளின் செயற்பாடுகள் குறித்து விமர்சித்த அவர்,
“கடந்தகால அரசுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தமது அரசியல் பழிவாங்கல்களுக்காகவே பயன்படுத்தின. குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகப் பல அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், தற்போதைய ஆட்சியில் அவ்வாறான சூழல் முற்றாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படும்போதே, அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. பாதாள உலகக் குற்றங்களையும் போதைப்பொருள் கடத்தலையும் முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமாயின், அதற்கெனப் பிரத்தியேகமான வலுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

அதற்கமைவாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயம்.!

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்’ காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு…

1 0 0
இலங்கை செய்திகள்

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு.!

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…

75 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் காவலில் உ**யிரிழந்த சந்தேகநபர்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்.!

கொபேகனே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த வேளையில் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சந்தேகநபரின் சம்பவம் தொடர்பில், அப்பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ்…

78 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடியோடு ஒடுக்கும் இரு புதிய சட்டமூலங்கள்.!

அரசால் முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’ ஆகியன மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடியோடு…

83 0 0