உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸ் காவலில் உ**யிரிழந்த சந்தேகநபர்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
85 பார்வைகள்

கொபேகனே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த வேளையில் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சந்தேகநபரின் சம்பவம் தொடர்பில், அப்பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் தங்களது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமைக்காகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

25 ஆம் திகதி பிற்பகல் கொபேகனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரைப் பிரதேசவாசிகள் பிடித்து கொபேகனே பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், 27 ஆம் திகதி இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

குறித்த மரணத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள் ஐவர் கொபேகனே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சந்தேகநபரைக் கைது செய்து மரத்தில் கட்டி வைத்து ஒரு மணி நேரம் கடப்பதற்குள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கி, அவரைப் பாதுகாப்பாகப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவருக்குத் தாக்குதல் எதுவும் நடத்தப்பட்டிருந்தால், அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட அந்தப் பிரதேசவாசிகள் விடுவிக்கப்படவில்லையென்பதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் ஆளுமையை மேம்படுத்த வேண்டும்.!

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால் எதிர்கொள்ளும் சவால்களை ஈடுசெய்ய, கல்வியின் ஊடாகவே தமது ஆளுமையையும் திறமைகளையும் வெளிப்படுத்த…

53 0 0
இலங்கை செய்திகள்

நிர்வாகச் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்.!

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அமைச்சுக்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மோசமான அம்சங்களைக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களையே…

64 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயம்.!

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்’ காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு…

80 0 0