19 ஆவது உலக தொழிற்சங்க சம்மேளனம் இலங்கையில்!
19ஆவது உலக தொழிற்சங்க சம்மேளன மாநாட்டை 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த 800 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வலுவான தொழிற்சங்கத் துறை மற்றும் மூலோபாய அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு, மாநாட்டை நடத்துவதற்கான பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான யோசனையைத் தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இதனையடுத்து, மாநாட்டை நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.’


