உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சீரற்ற காலநிலை :- சாந்திபுரம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கம்: 5 வீடுகள் கடும் சேதம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
67 பார்வைகள்

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது டன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டது டன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.

மேலும், வீடுகளில் இருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தை தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பல பாகங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.மேலும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் உரிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு.!

களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்தவரும்,…

85 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவிலில் கிணற்றில் இருந்து T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து,…

74 0 0
இலங்கை செய்திகள்

காவந்தீச யானைக்கு அஞ்சலி நிகழ்வு

இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த ‘கவந்தீச’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம…

81 0 0
இலங்கை செய்திகள்

பொத்துவிலில் யானை உயி@ரிழப்பு: மின்சாரம் தாக்கியதா என விசாரணை!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் – ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித-யானை மோதல்கள்…

71 0 0