உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காவந்தீச யானைக்கு அஞ்சலி நிகழ்வு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
81 பார்வைகள்

இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த ‘கவந்தீச’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நேற்று (25) நடைபெற்றது.

இவ்வஞ்சலி நிகழ்வை அம்பாறை சாஸனாரக்ஷக பலமண்டலத்தின் செயலாளரும், நாமல் ஓயா கல்லூரியின் பிரதி அதிபரும், கல் ஓயா நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நாமல் தாலவ சைலபாம்பராம விகாரையின் ஸ்தாபகருமான வணக்கத்திற்குரிய சாஸ்திரவேதி கம்பஹ நாரத தேரர் தலைமையில் மத அனுஷ்டானங்களுடன் நடத்தப்பட்டது.

ஊடகவியலாளர் சுசந்த அமரபந்து அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் செல்வி யமுனா கொனாரா அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார்.

நிகழ்வின் போது, உயிரிழந்த கவந்தீச யானையின் நினைவாக மதக் கிரியைகள் இடம்பெற்றதுடன், வனவிலங்குகள் மற்றும் இயற்கையின் பாதுகாப்புத் தொடர்பிலும் விசேட கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் சீரற்ற காலநிலை :- சாந்திபுரம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கம்: 5 வீடுகள் கடும் சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது டன், 5 குடும்பங்களைச் சேர்ந்த…

61 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவிலில் கிணற்றில் இருந்து T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து,…

73 0 0
இலங்கை செய்திகள்

பொத்துவிலில் யானை உயி@ரிழப்பு: மின்சாரம் தாக்கியதா என விசாரணை!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் – ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித-யானை மோதல்கள்…

70 0 0
இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம் மற்றும் முற்பணம் வழங்கப்பட வேண்டும்!

இவ்வருடம் நவம்பர் 8ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் தீபாவளி முற்பணத்தை நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பதாக வழங்க…

82 0 0